Sunday 29 May 2011

யாராவது சொல்லுங்களேன்!

நான் தான் லச்சு பேசுகிறேன்.

எங்கன்னு  தேடாதீங்க.. அனுவோட குட்டிச்சேர்ல இருக்கேன் பாருங்க.

அங்க கம்ப்யூட்டர்ல மும்முரமா இருக்கிறது  அனுவோட அப்பா ரகு நந்தன்.
என்னமோ எழுதறாரே எட்டிப்பாக்கலாமா? என்ன அருமையா எழுதறாருப்பாருங்களேன்.
"குழந்தைகள் நமக்குள் பால்யத்தை விதைக்கும் விவசாயிகள்"

கையில் பிரஷ் வச்சிக்கிட்டு துணியில வித்தியாசமான ஓவியங்களாய்
தீட்டுறது  அம்மா கண்மணி.

தனிரூம்ல கிரிக்கெட்  பாத்துக்கிட்டு ஜாலியா இருக்கிறது தாத்தா ராகவன்.
பாக்குறது என்னமோ மறுஒளிபரப்புதான்.ஆனாலும் ரொம்ப ஆர்வத்தோட பார்ப்பார்.

இவரோட தர்மபத்தினி அம்சவேணி கோயிலே கதின்னு இருப்பாங்க.
ரொம்ப பக்தின்னு நினைச்சிடாதீங்க..எல்லாம் பக்கத்துவீட்டு கௌரியம்மாகூட ஊர்வம்பு பேசத்தான்.

எல்லாரைப்பத்தியும் சொல்லிட்டனா?அட அனுவைப்பத்தி சொல்லவேயில்லயே.

அனுதான் என் எஜமானி.பெரியஸ்கூல்ல 3வதுபடிக்கிறாள்.நல்லா படிப்பா.
எப்பவும் 3வதுரேங்குக்குள்ள எடுத்துடுவா.அவங்க ஸ்கூல்ல எல்லா பிரிவுக்கும்
சேர்த்துதான் ரேங்க் போடுவாங்க.ஆனா இப்பொழுதெல்லாம் அனு ரொம்ப குறும்பு பண்றாளாம்.
யாரையாவது பிடிச்சு அடிச்சுடறாளாம்.நேத்தைக்குக்கூட தாரணியோட நோட்ல கிறுக்கிவிட்டாளாம்.
பனிஷ்மெண்ட் குடுத்து சாரி கேட்க சொன்னாலும் கேக்கவேயில்லயாம்.


சரி அதை அப்புறம் பேசிக்கலாம்.

இப்போ அனு டான்ஸ் கிளாஸ் முடிச்சிட்டு காத்துக்கிட்டு இருந்தாள்.அதோ டிரைவர்மாமா  வந்துட்டார்.

அனு தன்னோட ஸ்கூல் பேகையும் லன்ச் பேகையும் தூக்கிக்கிட்டு வந்து வண்டியில் ஏறினாள்.

"டிரைவர் மாமா நான் இன்னைக்கு சிட்டுகுருவிய பாத்தேனே"

"அப்படியா கண்ணு"

இதுக்குமேல டிரைவர் மாமா பேசமாட்டார்.

வீடு வந்தாச்சு.

அம்மாவோ அப்பாவோ யாராவது வெளியில் நின்று சந்தோஷமா கட்டிபிடிச்சு
முத்தம் கொடுப்பாங்கன்னு வழக்கம்போல நினைச்சு ஏமாந்த அனு மெதுவா உள்ளே வந்தாள்.

"அனு, சீக்கிரம் ஹோம்வொர்க் முடிச்சிட்டு சாப்பிட்டு விட்டு தூங்கனும்மா.
நாளைக்கு காலையில் ஸ்விம்மிங் கிளாஸ் போகனும்",
அம்மா துணீயிலிருந்து கையும்கண்ணும் எடுக்காமயே விரட்டுனாங்க.

ராத்திரி மெதுவாக அப்பாவிடம் சென்றாள்.அப்பா இன்னும் கம்ப்யூட்டர்லதான் இருந்தார்.
"அப்பா நான் இன்னைக்கு ஒண்ணு பார்த்தேனே"

"நாளைக்கு பேசலாம் டார்லிங்க.குட் நைட்" ஒரு முத்தம் கொடுத்து  திரும்பவும் கம்ப்யூட்டர்ல மூழ்கிட்டார்.

அம்மா ஓவியத்திற்கு ஃபைனல்டச் கொடுத்துக்கொண்டிருந்தார்.
பக்கத்தில் போனால் பயங்கரமா திட்டு விழும்.

"தாத்தா ஒரு கதை சொல்லட்டுமா"

"என்னடா பௌலிங் போட்றீங்க.எல்லாம் விளம்பரத்துல நடிக்கத்தான் லாயக்கு"

"என்ன அனும்மா கேட்ட..எங்க காணோம்..அடச்சே மறுபடியும் ஒரு சிக்ஸ்"

வழக்கம்போல யாருமே அனு சொல்றத கேக்கவேயில்ல.

அனு அவளோட தனிரூமுக்குள் வந்தாள்.

அவ இன்னைக்கு ஸ்கூல்ல சிட்டுகுருவியைப்பார்த்தாளாம்.செல்ஃபோன் டவர்ல இருந்து
வருகிற கதிர்வீச்சு சிட்டுக்குருவிகளை அழிச்சிடுமாம்.
பெரியவளானாலும் செல்ஃபோன் யூஸ் பண்ணமாட்டாளாம்.
அப்புறம் கலர்ஃபுல் பட்டர்ஃப்ளை நிறைய பார்த்தாளாம்.கலர்ஃபுல்னா ஃபுல்லா கலர்ஸ் இருக்கும்ல
அந்த மாதிரின்னு எனக்கு சொன்னா தெரியுமா!!

அன்னைக்கு ஸ்கூல்ல நடந்த எல்லாவற்றையும் என்னிடம் சொல்லிவிட்டு தூங்கிவிட்டாள்.

இந்தமாதிரி நிறைய கதைகள் என் கிட்டே சொல்லியிருக்கா..நீங்க யாராவது அனுவோட
அப்பா அம்மாவிடம் இந்த கதையெல்லாம் சொல்லுங்களேன்.

..

..



2 comments:

  1. கதை நல்லா இருக்கே..!

    எழுதினவர் பெயரை போட
    மறந்துட்டியா பாவா..!

    ReplyDelete
  2. //வெங்கட் said...

    கதை நல்லா இருக்கே..!

    எழுதினவர் பெயரை போட
    மறந்துட்டியா பாவா..!//
    அட ஆமாம் சரி சரி உனக்குத்தான் தெரியுமே நமக்கு வெளம்பரம் புடிக்காதுல்லா ஏன்னா நாம simple&sample

    ReplyDelete