Monday 9 May 2011

அட்சயதிரிதியை ஸ்பெஷல்..



அட்சயதிரிதியைக்கு முதல் நாள்..

ஒய்ஃப்:என்னங்க நாளைக்கு அட்சயதிரிதியை

நான்:தெரியுமே அதுக்கென்ன இப்போ?

ஒய்ஃப்:என்னங்க இவ்வளவு சாதாரணமா சொல்றீங்க..
 டிவில எத்தனை விளம்பரம் வருது எவ்ளோ நல்ல நாள்..

(அவனுங்க பிச்சக்காரனுக்கு ஒருதினம்னுகூட கொண்டாடுவானுங்க விளம்பரம் கிடைச்சா போதுமே)

ஒய்ஃப்:அன்னைக்கு தங்கம் வாங்குனா செல்வம் பெருகுமாங்க..

(ஆமா கடைக்காரனுக்கு வருமானம் பெருகும் நமக்கு செலவு பெருகும்)

ஒய்ஃப்:நாமளும் வாங்கலாங்க..

நான்:அது வந்து...

ஒய்ஃப்:உங்களுக்கு என் மேல பாசமே இல்ல..

நான்: இல்லம்மா வந்து ..இதுக்கெல்லாம் அழுதுக்கிட்டு..

ஒய்ஃப்:நாளைக்கு கடைக்கு போறோம்.நகை வாங்கறோம்.

(கசாப்புக்கடையில ஆடுக்கிட்ட பர்மிஷன் வாங்கியா வெட்றான்..ம்ஹூம்)

எல்லாம் முடிஞ்சு இரவு டிவி பாத்துக்கிட்டு இருந்தோம்..

அப்ப ஒரு விளம்பரம்..

"அண்ணா என்றால் பரிசுத்தமான அன்பு.அதனால் நான் அட்சயதிரிதிக்கு எங்கண்ணனுக்கு platinumதான் கிஃப்ட் செய்வேன்"

ஒய்ஃப்: என்னங்க...

அடேஏஏய்ய்ய்ய்

..

..
          



10 comments:

  1. நானு என் மனைவிக்கு

    2 பவுன்ல ஒரு வைர நெக்லஸ்.,
    3 பவுன்ல ஒரு பிரேஸ்லட்.,
    2 பவுன்ல தோடு.,
    4 பவுன்ல 2 வளையல்

    எல்லாம் வாங்கி குடுத்தேன்..

    ஆமா அன்னிக்கு நீ உன் மனைவிக்கு
    என்ன வாங்கி குடுத்த..?

    # சும்மா கொளுத்தி போடுவோர் சங்கம்.

    ReplyDelete
  2. எல்லா குடும்பத்திலும் இப்படித்தான்..

    ReplyDelete
  3. //நானு என் மனைவிக்கு

    2 பவுன்ல ஒரு வைர நெக்லஸ்.,
    3 பவுன்ல ஒரு பிரேஸ்லட்.,
    2 பவுன்ல தோடு.,
    4 பவுன்ல 2 வளையல்

    எல்லாம் வாங்கி குடுத்தேன்..

    ஆமா அன்னிக்கு நீ உன் மனைவிக்கு
    என்ன வாங்கி குடுத்த..?//
    ஏன் இந்த கொலைவெறி? நீ பெற்ற துன்பம் எல்லோரும் பெறணுமோ..அதுசரி பாவா லிஸ்ட்ல அந்த 3கல் மூக்குத்தி மிஸ் ஆகுதே..தங்கச்சி கொஞ்சம் கவனிம்மா
    ஏதோ நம்மால முடிஞ்சது

    ReplyDelete
  4. # கவிதை வீதி # சௌந்தர் said...


    //எல்லா குடும்பத்திலும் இப்படித்தான்..//

    sameblood?!!

    ReplyDelete
  5. //சும்மா கொளுத்தி போடுவோர் சங்கம்.//
    மூணாவதா பரட்டை சங்கமும் ஆரம்பிக்கணும் போல இருக்கே
    அதுக்கு தலைவர் நீங்க தான் வெங்கட்
    ஸ்லோகன் : " பத்த வச்சிட்டியே பரட்டை" :)

    //அண்ணா என்றால் பரிசுத்தமான அன்பு.அதனால் நான் அட்சயதிரிதிக்கு எங்கண்ணனுக்கு platinumதான் கிஃப்ட் செய்வேன்//
    அப்போ தங்கச்சிகளுக்கு ஒன்னும் இல்லையா :(


    ஆனாலும் சிலர் முட்டாள்தனமா போய் வலைல விழ தான் செய்றாங்க ...
    இதெல்லாம் சும்மா வியாபார தந்திரம்னு யோசிக்கவே மாட்டேங்குறாங்க

    ReplyDelete
  6. //
    ஆனாலும் சிலர் முட்டாள்தனமா போய் வலைல விழ தான் செய்றாங்க ...
    இதெல்லாம் சும்மா வியாபார தந்திரம்னு யோசிக்கவே மாட்டேங்குறாங்க//
    நல்ல உணர்வுகளை தம் சந்தைப்படுத்துதலுக்கு பயன்படுத்தும் வியாபார தந்திரம் என்பதைத்தவிர வேறு என்ன சொல்ல

    ReplyDelete
  7. நண்புரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்... தெரிந்துக் கொள்ள வலைச்சரம் வாங்க...

    "பச்சைக்கிளி பாண்டியம்மா V/s பதிவர்கள்...."

    http://blogintamil.blogspot.com/2011/05/vs.html

    ReplyDelete
  8. நண்புரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்... தெரிந்துக் கொள்ள வலைச்சரம் வாங்க...

    "பச்சைக்கிளி பாண்டியம்மா V/s பதிவர்கள்...."

    http://blogintamil.blogspot.com/2011/05/vs.html

    ReplyDelete
  9. "அண்ணா என்றால் பரிசுத்தமான அன்பு.அதனால் நான் அட்சயதிரிதிக்கு எங்கண்ணனுக்கு platinumதான் கிஃப்ட் செய்வேன்"
    நல்ல விளம்பரம்தான்.

    ReplyDelete
  10. கிச்சா - படிச்சேன் - மறுமொழி போட்டாச்சு - அட்சயத்ரிதியை எல்லாம் ஒரு 7 - 8 வருசத்துக்குளே வந்தது தான் - என்ன செய்யறது - ம்ம்ம் - நட்புடன் சீனா

    ReplyDelete